விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ML) மாவட்டச் செயலாளர் சமுத்திரம் தலைமையில் இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (MK) மாவட்டச் செயலாளர் ஜோதிமணி, மாவட்டப் பொருளாளர் ஆனந்தன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், மாவட்டத் தலைவர் குமரவேல் மற்றும் (SUCI) எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக அனைத்து இடதுசாரி கட்சிகளும் இணைந்து களமிறங்கிப் போராடுவது எனவும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஒன்றிணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பொதுமக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தகுந்த ஆதாரங்களுடன் அரசின் கவனத்திற்குத் கொண்டு சென்று தீர்வு காண்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- Virudhunagar
இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
விருதுநகரில் இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
