Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
- Madurai

குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்குச் சரிபாதி இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், 186 யாகசாலைகளில் வெறும் 50 யாகசாலைகள் மட்டுமே ஒதுக்கியிருப்பது தமிழ்மொழிக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், விமானம் மற்றும் கருவறையிலும் தமிழ் வழிபாட்டு முறை சரிபாதி ஒலிக்க வேண்டும் என்றும், சங்கராச்சாரியாருக்கு முதலிடம் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மூங்கிலடிகளார், சத்யபாமா, வழக்கறிஞர் வாஞ்சிநாதன், பசும்பொன்பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் பெண் என்பதாலும், கணவரை இழந்தவர் என்பதாலும் ஓரங்கட்டப்படுவதாகக் கூறி கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழில் குடமுழுக்கு நடத்தக் கூடாது என எந்த ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது என்பதைச் சிவாச்சாரியார்கள் பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா எனச் சவால் விடுத்தார். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதுடன், செப்டம்பர் 17-ஆம் தேதிக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் திரட்டி மதுரையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனத் தவெக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.Ask

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.