Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • எஸ்.ஐ.-யை வெட்டிய ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
- Dindigul

எஸ்.ஐ.-யை வெட்டிய ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

எஸ்.ஐ.-யை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொலை வழக்கு தொடர்புடைய பிரபல ரவுடியைப் பிடிக்கச் சென்றபோது, சிறப்புப் பிரிவு சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய ரவுடியைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

சின்னாளப்பட்டி சிக்கனம்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜா (55) மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். நிலக்கோட்டை அருகே என்.கோவில்பட்டியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர், மற்றொரு கொலைக்குத் திட்டமிடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. இளஞ்செழியன் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

தப்பியோட முயன்ற ரவுடி ராஜாவைப் பிடிக்க முயன்ற சிறப்புப் படை சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத்தை, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதனையடுத்துப் பாதுகாப்புக்காக எஸ்.ஐ. அருண் பிரசாத் ரவுடி ராஜாவைத் துப்பாக்கியால் காலுக்குக் கீழே சுட்டார்.

தப்பியோட முயன்று காயமடைந்த ரவுடி ராஜாவும், வெட்டுப்பட்ட எஸ்.ஐ. அருண் பிரசாத்தும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். ரவுடி எஸ்.ஐ.-யை வெட்ட முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.