Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • வைகை ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் புனித நீர்
- Madurai

வைகை ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் புனித நீர்

வைகை ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் யானை மீது ஊர்வலமாக – புனித நீர்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விழாவின் நான்காம் நாள் நிகழ்வாக வைகை ஆற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனித நீர் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, செப்டம்பர் 6 முதல் சிறப்பு மற்றும் யாகசாலை பூஜைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேகத்தின் நான்காம் நாளான நேற்று, கோவில் வளாகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோவில் யானையுடன் ஊர்வலமாக வைகை ஆற்றின் தென்கரைப் பகுதிக்கு வருகை தந்தனர். அங்குச் சிறப்பு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பப்பட்டது.

தங்கக் குடத்துடன் சிவாச்சாரியார் யானையின் மீது அமர, மேளதாளங்கள் முழங்கப் பிரம்மாண்ட ஊர்வலமாகப் புனித நீர் மீண்டும் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர், அங்கு நடைபெற்ற சிறப்பு வேள்விகள் மற்றும் யாகசாலைப் பூஜைகளின் போது இந்தப் புனித நீர் பயன்படுத்தப்பட்டது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.