• Home  
  • பாலித்தீன் அச்சடிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
- Virudhunagar

பாலித்தீன் அச்சடிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

சிவந்திபுரம் பாலித்தீன் அச்சடிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

விருதுநகர் சிவந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த பாலித்தீன் பைகள் அச்சிடும் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்களும் பிளாஸ்டிக் பைகளும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

விருதுநகர் முத்துராமன்பட்டியைச் சேர்ந்த பொன் கணேஷ் என்பவர், சிவந்திபுரம் பகுதியில் பாலித்தீன் பைகளில் அச்சு செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.

இத்தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாகத் தீ விபத்து நேரிட்டுள்ளது. தொழிற்சாலை முழுவதும் இருப்பு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூலப்பொருட்களின் மீது தீ மளமளவெனப் பரவிப் பற்றி எரிந்தது.

தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் தீவிரமாகப் போராடித் தீயைக் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பவம் குறித்து விருதுநகர் கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.