• Home  
  • மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு – முன்னேற்பாடு குறித்த ஆலோசனை
- Madurai

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு – முன்னேற்பாடு குறித்த ஆலோசனை

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு – முன்னேற்பாடு குறித்த ஆலோசனை

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இப்பணிகளைக் கண்காணிக்க அரசுச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலன் துறை திரு. கொ. வீர ராகவ ராவ், நகராட்சி நிர்வாக இயக்கக இயக்குநர் திரு. ப. மதுசூதன் ரெட்டி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் முனைவர் சி. பழனி ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருவிழாவிற்காக வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் திரு. எஸ். ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் இந்நிகழ்வில் உடனிருந்து பணிகளின் நிலை குறித்து விளக்கினர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.