• Home  
  • பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா அ.தி.மு.க.வினர் மரியாதை
- Virudhunagar

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா அ.தி.மு.க.வினர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா அ.தி.மு.க.வினர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு, அ.தி.மு.க. மேற்கு மாவட்டக் கழகம் மற்றும் நகரக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்துச் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் கலாநிதி, நகர செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம் மற்றும் கண்ணன் ஆகியோருடன் நகரமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நகர, ஒன்றிய நிர்வாகிகளும் கழகத்தினரும் திரளாகக் கலந்துகொண்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.