• Home  
  • மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் – 5 டன் வண்ண மலர்களால் அலங்காரம்
- Madurai

மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் – 5 டன் வண்ண மலர்களால் அலங்காரம்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – 5 டன் வண்ண மலர்களால் மலர் அலங்காரம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தை அழகுபடுத்துவதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 டன் மலர்களைக் கொண்டு பிரம்மாண்ட மலர் மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக விழாவைச் சிறப்பிக்கும் வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான சுமார் 5 டன் மலர்கள் வரவழைக்கப்பட்டு, புதுமண்டபம் பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

சம்பங்கி, அரளி, இருவாச்சி, சாமந்தி, ஆந்தூரியம் உள்ளிட்ட பலவகையான மலர்கள் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு போன்ற பல்வேறு வண்ணங்களில் வகைப்படுத்தப்பட்டு மாலைகளாகத் தொடுக்கும் பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவிலின் முக்கிய கோபுரங்கள் மற்றும் வளாகம் முழுவதும் இந்த வண்ண மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் அலங்காரம் செய்யப்பட உள்ளதால், அதற்கேற்றார் போல் பிரத்யேக மாலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.