உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளான இன்று, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புகள்: கும்பாபிஷேகப் பணிகள் 100 சதவீதம் நிறைவுபெற்றுள்ள நிலையில், காவல்துறையும் சுகாதாரத் துறையும் தீவிரப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோவில் மேல் தளத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுப்பணித்துறை மற்றும் கட்டமைப்புப் பொறியாளர்களின் ஆய்வுக்குப் பின்னரே இறுதி அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலுக்கல் முறை மூலம் பொதுமக்களுக்கு 2,000 பாஸ்கள் வழங்கப்பட்டு அவர்கள் மேல் தளத்திற்கு அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாதுகாப்பு நலன் கருதி சித்திரை வீதியில் பொதுமக்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், கோபுரப் பகுதிக்குச் சென்று வருவோர் பயன்படுத்தும் வழியாக மட்டுமே அது செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் யாக பூஜைகள் நடத்தவும், கருவறைக்குள் சென்று கலசத்தில் நீர் ஊற்றவும் தமிழ் ஓதுவார்களுக்குச் சிறப்பு முன்னுரிமையும் முழுமையான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, விழாவையொட்டி மதுரையில் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- Madurai
கும்பாபிஷேகம் – இறுதி கட்ட ஆய்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் – இறுதி கட்ட ஆய்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
