விருதுநகர் இந்து நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட செந்திக்குமார நாடார் கல்லூரியில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் கூடைப்பந்துப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன.
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் விருதுநகர், மதுரை, சிவகாசி மற்றும் ராஜபாளையம் ஆகிய பகுதிக் கல்லூரிகளிலிருந்து மொத்தம் 11 அணிகள் கலந்துகொண்டு நாக்-அவுட் முறையில் தங்களது திறமைகளைத் திறம்பட வெளிப்படுத்தினர். இப்போட்டியைக் கல்லூரிச் செயலாளர் சம்பத்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சாரதி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவில், மதுரை லேடி டோக் கல்லூரி அணி முதல் இடத்தையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. மேலும், மதுரை பாத்திமா கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும், விருதுநகர் வன்னியப் பெருமாள் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்றன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்குக்கல்லூரித் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலாளர் சம்பத்குமார் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் முனைவர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குக் கோப்பைகளை வழங்கிச் சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி உப தலைவர் வெங்கடேஷ், திருமதி சாந்தி, பொருளாளர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முருகேசன் உள்ளிட்டோரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் – மகளிர் கூடைப்பந்து போட்டி
VHNSN கல்லூரியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கூடைப்பந்து போட்டி
