• Home  
  • FCOA, NCCPA தர்ணா போராட்டம்
- Madurai

FCOA, NCCPA தர்ணா போராட்டம்

FCOA, NCCPA சார்பில் தென்மண்டல தர்ணா போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, எஃப்சிஓஏ மற்றும் என்.சி.சி.பி.ஏ. (FCOA/NCCPA) சங்கம் சார்பில் மதுரையில் மண்டல அளவிலான மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

NPS மற்றும் UPS திட்டங்களை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும்; ஓய்வூதிய திருத்த சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் (Pension Validation Act 2025); 2026-க்கு முன்பாக ஓய்வுபெற்றவர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் செய்யும் வகையில் 8-வது ஊதியக்குழுவில் குறிப்பு விதிகளை (TOR) மாற்ற வேண்டும்; BSNL/MTNL ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியம் திருத்தம் செய்யப்பட வேண்டும்; 50 சதவீத பஞ்சப்படியை அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் திருத்தம் செய்தல் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

மதுரை ரயில்வே DRM அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்தத் தென்மண்டலத் தர்ணா போராட்டத்திற்கு, அமைப்பின் தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் அகில இந்தியத் துணை பொதுச்செயலாளர் மோகன்தாஸ் சிறப்புடன் கலந்துகொண்டார். மேலும், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளும், ஏராளமான ஆண்களும் பெண்களும் இப்போராட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.