• Home  
  • எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை அமையும்
- Madurai

எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை அமையும்

தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா பேச்சு – எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை அமையும்

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா, தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்ததுடன், தவெக தலைவர் தளபதியின் தேர்தல் வெற்றிப் பயணம் குறித்துச் சிறப்புரையாற்றினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு பாதுகாப்பாக இருந்ததாகவும், ஆனால் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் கடுமையாகச் சாடினார்.

கூட்டத்தில் பேசிய அவர், "எட்டு தொகுதிகளில் பிரச்சாரம் செல்வதாகக் கூறிவிட்டு கொளத்தூரில் தோற்று வீட்டி லிருக்கிறீர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; அடுத்த தேர்தலில் நமது தலைவர் தளபதி 234 தொகுதிகளிலும் பிரச்சாரத்திற்குச் சென்றால், எதிர்க்கட்சியே இல்லாத ஒரு சட்டசபை அமையும்" என உறுதியுடன் தெரிவித்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.