• Home  
  • அமைச்சர் விக்னேஷ் கள ஆய்வு – முக்கிய அறிவிப்பு
- Dindigul

அமைச்சர் விக்னேஷ் கள ஆய்வு – முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல்லில் தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட மகளிர் அணி அலுவலகத்தைத் திறந்து வைத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திண்டுக்கல்லில் தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட மகளிர் அணி அலுவலகத்தைத் திறந்து வைத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

டாஸ்மார்க் ஊழியர்களின் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நடப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தொழிலாளர்கள் இதுபோன்ற சூழ்ச்சிகளுக்குப் பலியாக வேண்டாம் என்று எச்சரித்தார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னிட்டு இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் நேரடியாக வந்து கள ஆய்வு செய்யப் போவதாக அறிவித்தார். திண்டுக்கல்லில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய புறநகர் பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் தோல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த இடம் குறித்த புகார்களை ஆய்வு செய்து, மக்களின் நலன் கருதி முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குக் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் பதிலளிப்பார்கள் என்றும், தங்களது கட்சி ராணுவக் கட்டுக்கோப்புடன் செயல்படுவதாகவும் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.