விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
