• Home  
  • விருதுநகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்
- Virudhunagar

விருதுநகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக, இன்று ஜூலை 17-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களின் விவரங்களை https://se.census.gov.in என்ற இணையதளத்தில் சுயமாகப் பதிவு செய்யலாம்.

இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை களப்பணியாளர்கள் மூலம் நேரடி கணக்கெடுப்பு நடைபெறும். இப்பணிக்காக 3,000 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்தவுடன் கிடைக்கும் 11 இலக்க ‘சுய கணக்கெடுப்பு குறிப்பு எண்ணை’ (SRN) பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். களப்பணியாளர்கள் இல்லத்திற்கு வரும்போது, அவர்களின் அடையாள அட்டையைச் சரிபார்த்து இந்த எண்ணை வழங்கினால், அவர்கள் விவரங்களை உறுதி செய்வார்கள்.

கல்வி, வீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைச் சேகரிக்க இந்தப் பதிவு உதவும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.