• Home  
  • பணி நிரந்தரம் – மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்
- Madurai

பணி நிரந்தரம் – மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, மதுரை புதூர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஒப்பந்த மின்வாரிய பணியாளர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, மதுரை புதூர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஒப்பந்த மின்வாரிய பணியாளர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அலுவலகம் முன்பாக 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர். மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தங்களை ஒரு மாத காலத்திற்குள் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில், தற்போது தேர்வு எழுதித்தான் பணியில் சேர முடியும் என அவர் கூறுவது ஏற்புடையதல்ல என்று பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “தங்களால் இனி தேர்வு எழுத முடியாது” எனத் தெரிவித்துள்ள அவர்கள், அமைச்சரின் இந்த நிலைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும், அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டமாகச் சென்னையை நோக்கிப் பிரம்மாண்டமான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் திடீர் போராட்டத்தால் மின்வாரிய அலுவலகப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.