• Home  
  • மதுரை விளாங்குடியில் எம்எல்ஏ வாகனம் முற்றுகை
- Madurai

மதுரை விளாங்குடியில் எம்எல்ஏ வாகனம் முற்றுகை

மதுரை விளாங்குடியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமைத் தொடங்கி வைக்க வந்த மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியின் வாகனத்தை, TVK நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சியின் பழைய நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், புதிய பொறுப்பாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் TVK நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

மேலும், சமீபத்தில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளில் ரேஷன் அரிசி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சையும் அவர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதையும் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, எம்.எல்.ஏ.-வின் வாகனத்தை மறித்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் உரிய பாதுகாப்புப் பணியில் ஈடுபடாத நிலையில், இந்தச் சம்பவம் விளாங்குடி பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.