விருதுநகரில் பாவேந்தர் பேரவை மற்றும் குறள் நெறிக் கழகம் சார்பில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் தம்பியும் பேராசிரியருமான திருமாறனுக்கான புகழஞ்சலி கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேராசிரியர் திருமாறனின் திருவுருவப்படத்தை முன்னாள் வணிகர் சங்க தலைவர் வி.வி.எஸ். யோகன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட திக துணைத் தலைவர் நல்லதம்பி வரவேற்புரை நிகழ்த்திய நிலையில், திருமாறனின் மகன் அற வள்ளுவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற சான்றோர்கள் பேராசிரியர் திருமாறனின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புடன் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் ஆனந்தம், விருதுநகர் நகராட்சி சேர்மன் மாதவன், நகர திமுக செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் குறள் நெறிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
