• Home  
  • சிவகாசி சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
- Virudhunagar

சிவகாசி சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இயங்கி வந்த சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ் என்பவர் காட்டுப்பகுதியில் தகர செட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளார். வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உடல் கருகி இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் போராடி உடல்களை மீட்டுச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றிச் செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.