பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உட்பட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த ஜூலை 15-ல் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் உள்ளிட்ட பலரிடம் ஏற்கனவே பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கியது குறித்தும் மின்வாரியத்திடம் ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்ற கிளை வழங்கிய நிபந்தனை ஜாமின் உத்தரவின் அடிப்படையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
- Dindigul
பழனி கோயில் நில மோசடி
பழனி கோயில் நில மோசடி – அதிகாரி ஆஜர்
