• Home  
  • மருந்து வணிகர்கள் மாநாடு
- Madurai

மருந்து வணிகர்கள் மாநாடு

மருந்து வணிகர்கள் மாநாடு – ஆன்லைன் விற்பனைக்குத் தடை

மதுரை மடீசியா அரங்கில் நடைபெற்ற மதுரை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கூட்டத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் ஆன்லைன் மருந்து வணிகத்தை மத்திய அரசு தடை செய்யத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், மருந்து வணிகர்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் வீட்டு உபயோகச் சலுகை வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தனி மருந்தியல் பல்கலைக்கழகம் (Pharma University) அமைக்கவும், உயி ரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், தனி நல வாரியம் அமைக்கவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இதற்கிடையே, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சி.எல். பெய்டு மேத்தா கல்லூரியை ஒரு சில நபர்கள் தங்களது குடும்பச் சொத்தாக மாற்றியுள்ளதாகச் சங்கத்தின் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கைமாறிய இக்கல்லூரி மற்றும் சிஷ்யா பள்ளி விவகாரம் குறித்து தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து சொத்துகளை மீட்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.