• Home  
  • தரமற்ற தின்பண்டங்களுக்குத் தடை கோரி மனு
- Madurai

தரமற்ற தின்பண்டங்களுக்குத் தடை கோரி மனு

குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வண்ண வண்ண சாயங்கள் ஊற்றப்பட்ட தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்தத் தின்பண்டங்களில் சேர்க்கப்படும் ரசாயனச் சாயங்களால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டுத் தரமற்ற தின்பண்டங்களின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.