• Home  
  • கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தீர்ப்பு வரவேற்பு
- Madurai

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தீர்ப்பு வரவேற்பு

கரூர் கூட்ட நெரிசல் பலிக்கு அரசு பணி வழங்கிய அரசாணை ரத்து செய்யப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர்

கரூர் கூட்ட நெரிசல் பலிக்கு அரசு பணி வழங்கிய அரசாணை ரத்து செய்யப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை வழக்கறிஞர்கள் கிளிட்டஸ் மற்றும் முகமது ரஷித் வரவேற்றுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிய அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளிட்டஸ் கூறுகையில், வேலைவாய்ப்பை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நலன் கருதி சீமான் தலைமையில் தொடரப்பட்ட இவ்வழக்கில், விதிமுறைகளை மீறி அரசு பணி வழங்க முடியாது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

இதேபோல், மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரஷித் கூறுகையில், அரசாணை ரத்து செய்யப்பட்டதை முழுமையாக வரவேற்பதாகவும், அரசு மேல்முறையீடு செய்தாலும் அதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.