• Home  
  • சிவகாசி வெடி விபத்து – குடும்பத்தினருக்கு நிவாரண நிதி
- Virudhunagar

சிவகாசி வெடி விபத்து – குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் செங்கமலப்பட்டியில் அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.16 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா தலைமை தாங்கினார். தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி ஆகியோர் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி. செல்வம் மற்றும் அ. கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து, ராமச்சந்திரன் மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை ஆகியோரின் குடும்ப வாரிசுதாரர்களான பூமாரி, ஜெயலட்சுமி, லட்சுமி மற்றும் தமிழரசி ஆகிய 4 பேருக்கு அமைச்சர்கள் நிவாரணக் காசோலைகளை நேரில் வழங்கி, அவர்களின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா. ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் மோகனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்து சிறப்பித்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.