• Home  
  • வ.உ.சி அவமதிப்புக்கு எதிராகப் புகார்
- Dindigul

வ.உ.சி அவமதிப்புக்கு எதிராகப் புகார்

திண்டுக்கல்லில் வ.உ.சி அவமதிப்புக்கு எதிராகப் புகார்

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரை இழிவுபடுத்தும் வகையில் தனியார் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டதாகக் கூறி, அனைத்து பிள்ளைமார் சங்கங்கள் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை, வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், ஆதித்யா தனியார் தொலைக்காட்சியில் வெளியான புரோமோ வீடியோ ஒன்று தேசியத் தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாகத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிபரப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்களின் அமைதியைக் குழைக்கும் விதமாக இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பரவிவரும் அக்காட்சிகளை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சியின்போது வெள்ளாளர் சங்கப் பொருளாளர் தனபாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.