கேந்திரிய வித்யாலயா தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் சாதனை படைத்து மதுரை திரும்பிய திருப்பரங்குன்றம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பஞ்சாப்பில் நடைபெற்ற 55-வது தேசிய அளவிலான கபடி போட்டிகளில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற மதுரை திருப்பரங்குன்றம் பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் 17 வயதுப் பிரிவில் முதலிடத்தையும், மாணவிகள் 14 வயதுப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய பெருமையைத் தேடித்தந்துவிட்டு மதுரை திரும்பிய மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இக்குழுவினர் அடுத்தகட்டமாக அகில இந்திய அளவிலான தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக உடற்கல்வி ஆசிரியர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்
- Madurai
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தேசிய விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
