விருதுநகர் நகராட்சியில் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நகராட்சியில் ரூ.200-க்கும் குறைவாக சொத்து வரி உள்ள வீடுகளின் வரியை நகர்மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல், ஆணையாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் மறைமுகமாக உயர்த்தப்படுவதாகக் கூறி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குறைவாக வரி உள்ள இடங்களை உயர்த்த வழி வகை உள்ளதாக ஆணையாளர் பதிலளித்த நிலையில், வீட்டின் உரிமையாளர் மற்றும் நகர்மன்றத்திற்குத் தெரிவிக்காமல் உயர்த்த இது மன்னராட்சியா அல்லது மக்களாட்சியா என உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
மேலும், குடிநீர் குழாய் பதிப்பால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பது குறித்தும், குப்பை அள்ளும் பணி மற்றும் அடி குழாய் பராமரிப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, காமராஜர் சிலைக்கு வர்ணம் பூசாததைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இறுதியில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- Virudhunagar
மறைமுக சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்
விருதுநகரில் மறைமுக சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்
