• Home  
  • மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி – 4 வது நபர் கைது
- Madurai

மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி – 4 வது நபர் கைது

திருப்பரங்குன்றம் அருகே சாலை மறியல் – கிராம மக்கள் போராட்டம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான அறக்கட்டளைச் சொத்துகள் தனியாருக்குத் தம்பதி செய்யப் பட்ட வழக்கில், பத்திரப்பதிவுக்கு உதவிய திண்டுக்கல்லைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் உள்ள அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சேவை செய்வதற்காக கடந்த 1930-ஆம் ஆண்டு அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டது. இந்தச் சொத்துகள் கடந்த 2021-ஆம் ஆண்டு தனி நபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்கில் ஏற்கனவே கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா மற்றும் துணை ஆட்சியர் அன்பழகன் ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், பத்திரப்பதிவுக்கு உடந்தையாகச் செயல்பட்ட திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தென்மலை கிராமத்தைச் சேர்ந்த கலிகுமார் என்பவரை 4-வது நபராக காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்துள்ளனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.