விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி லட்சுமி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஊரணிக் கரை ஓம் கணபதி திருக்கோவிலில் உலக நன்மை வேண்டிச் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
வியாபாரிகள் தங்கள் தொழிலில் மேம்படவும், இல்லத்தரசிகள் குடும்ப ஆரோக்கியத்துடனும் வாழவும், நல்ல மழை பெய்து வெப்பம் தணிந்து விவசாயம் செழிக்கவும் வேண்டியும் இச்சிறப்புப் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவில் லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் மற்றும் மீனாட்சி நகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, குத்துவிளக்கில் தீப ஒளி ஏற்றி அம்மன் பஜனைப் பாடல்களைப் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினரும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.
- Virudhunagar
லட்சுமி நகரில் உலக நன்மை வேண்டி பூஜை
விருதுநகர் லட்சுமி நகரில் உலக நன்மை வேண்டி குத்து விளக்கு பூஜை
