• Home  
  • மருத்துவர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் – மருத்துவர்கள் பேரணி
- Dindigul

மருத்துவர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் – மருத்துவர்கள் பேரணி

மருத்துவர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் – திண்டுக்கல்லில் மருத்துவர்கள் பேரணி

மத்திய, மாநில அரசுகள் மருத்துவர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, திண்டுக்கல்லில் இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சங்கம் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.

கொல்கத்தாவில் பணியில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட மருத்துவர் அபயாவின் நினைவாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்களுக்கு முழுமையான பணிப் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு வழங்கக் கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் முன்பு தொடங்கிய இந்தப் பேரணி, திருச்சி சாலை கல்லறைத் தோட்டம் வரை ஊர்வலமாகச் சென்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் பதாகைகளை ஏந்தி, கண்டனக் கோஷங்களை எழுப்பியதுடன் பாதுகாப்பை வலியுறுத்தி உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.