டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரைத் தொடர்ந்து, மதுரை அவனியாபுரத்தில் உள்ள மின்வாரியத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் இயக்குனர் பாஸ்கரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2021-23 காலகட்டத்தில் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
2021-23 காலக்கட்டத்தில் மின்வாரியப் பொருட்கள் மேலாண்மைத் தலைமைப் பொறியாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றிய பாஸ்கரன், மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனது வீட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Madurai
மின்வாரிய முன்னாள் இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
மின்வாரிய முன்னாள் இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
