விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரம், பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பயிர் சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாட்டினைக் குறைப்பது குறித்த விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட கிஸான் மேளா மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்த கருத்துக்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு விவசாயிகள் அதிகளவில் செலவிடுவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த ஆட்சியர், பசுந்தாள் உரம், மண்புழு உரம், ஜீவாமிர்தம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து நவீன உர மேலாண்மையை பின்பற்றுவதன் மூலம் இடுபொருள் செலவைக் குறைத்து வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம் எனவும், இயற்கை விவசாயத்திற்கு அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அ.அம்சவேணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- Virudhunagar
விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம்
