மதுரை சின்ன சொக்கிகுளத்தில் நடைபெற்ற தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வருகை தந்த நடிகை அபிராமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
சினிமா உலகில் தனக்குப் பெரிய பெயர் வாங்கித் தந்தது மதுரை என்றும், மதுரைக்கு எப்போது வந்தாலும் தன் சொந்த ஊருக்கு வந்தது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், தமிழில் ஒரு வெப் தொடரிலும் நடித்து வருவதாகவும், மேலும் ஒரு புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சினிமா குடும்பத்தில் இருந்து வந்துள்ள நடிகர் விஜய், சரியான நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும் எனக் கூறிய அவர், விஜய் மக்களுக்கு நிச்சயம் நல்ல பல நலத்திட்டங்களைச் செய்வார் என நம்புவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஏற்பாட்டாளர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க 'விருமாண்டி' திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற "சண்டியேரே... சண்டியேரே..." பாடலைப் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
- Madurai
மதுரையில் நடிகை அபிராமி பேட்டி
மதுரையில் நடிகை அபிராமி பேட்டி – விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது
