மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், சுதந்திர தினத்தன்று தவெக நிர்வாகி மருது பாண்டியன் தேசியக் கொடியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு விதிகளின்படி பள்ளிகளில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கொடியேற்றக் கூடாது என்ற நிலையில், முதலமைச்சரின் ஆணைப்படி கொடியேற்றியதாக அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டதுடன், பொய் பரப்புரை செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்துச் சமூக ஆர்வலர் சதாம் உசேன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். விதிகளை மீறிய பள்ளி நிர்வாகம் மற்றும் தவறான தகவல் பரப்பிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Madurai
அரசுப் பள்ளியில் கட்சி நிர்வாகி தேசியக் கொடியேற்றிய விவகாரம்
அரசுப் பள்ளியில் அரசியல் கட்சி நிர்வாகி தேசியக் கொடியேற்றிய விவகாரம்
