• Home  
  • மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் நேரில் ஆய்வு
- Madurai

மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் நேரில் ஆய்வு

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் – மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் நேரில் ஆய்வு

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதையொட்டி, மதுரை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக, வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மாசி வீதிகளில் ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

பொதுக்கழிப்பறைகள், நடைபாதைகள், குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டு, அவற்றைச் செப்பனிட உத்தரவிட்டார்.

கோயிலைச் சுற்றியுள்ள குப்பைத்தொட்டிகளை உடனுக்குடன் அகற்றி, சுற்றுப்புறத்தை மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.