விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) சார்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் மறுகட்டமைப்பு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசாணை வழிகாட்டு நெறிமுறை எண். 143-ன்படி பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வது குறித்தும், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் முறை குறித்தும் பெற்றோர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.
கூட்டத்தின் நோக்கம் மற்றும் மறுகட்டமைப்பு தொடர்பான மாதிரி காணொளிக் காட்சி ஒளிபரப்பப்பட்டதுடன், கடந்த இரண்டு ஆண்டு காலப் பணிகள் அறிக்கையாக வாசிக்கப்பட்டன. மேலும், தங்களது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பழைய உறுப்பினர்களுக்குப் பாராட்டும் பரிசுகளும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
கூட்டத்தின் நிறைவில் பெற்றோர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஆசிரியர்கள் விளக்கமளித்துப் பதிலளித்தனர். இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், எஸ்.எம்.சி. (SMC) உறுப்பினர்கள் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- Virudhunagar
அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்
ஆமத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்
