Saturday, 5 September 2026

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • KCET முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா – குரேஷி சிறப்பு உரை
- Virudhunagar

KCET முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா – குரேஷி சிறப்பு உரை

காமராஜ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா – நடிகர் குரேஷி சிறப்பு உரை

விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் குரேஷி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களிடையே கலகலப்பான மற்றும் ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.

விழாவில் பேசிய நடிகர் குரேஷி, பொறியியல் மாணவர்களால் எந்தச் சூழ்நிலையிலும் சாதிக்க முடியும் என்றும், மதிப்பெண்களைத் தாண்டித் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், சோதனைகளைக் கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும், கல்லூரி காலத்து நட்பு வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என்றும் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியில் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

கல்வியில் சிறந்து விளங்கி முதல் ஏழு இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கல்லூரியின் செயலாளர் மகேஷ்குமார், முதல்வர் முனைவர் செந்தில், தலைவர் முரளிதரன், பொருளாளர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீமுருகன் உள்ளிட்டோர் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்களுடன் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.