விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் உள்ள கோயில் ஒன்றில், கையில் அரிவாளுடன் நள்ளிரவில் புகுந்த இரண்டு இளைஞர்கள் உண்டியலை உடைத்துத் பணத்தைத் திருடியதுடன், பூஜைப் பொருட்களையும் அள்ளிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் சூலக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ உடையார் மூட்டாத்தம்மன் கோயிலுக்குள் நேற்று நள்ளிரவில் நுழைந்த இரண்டு இளைஞர்கள், கையில் அரிவாளுடன் அச்சுறுத்தும் வகையில் வலம் வந்துள்ளனர். பின்னர் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கைப் பணத்தைத் திருடியுள்ளனர்.
உண்டியலுடன் நில்லாமல், கோயில் பூஜை பொருட்கள் மற்றும் சுவாமி அலங்காரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று திருட்டுச் சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, தப்பியோடிய அந்த இரண்டு இளைஞர்களைச் சூலக்கரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
- Virudhunagar
கோயிலுக்குள் புகுந்து உண்டியல் திருட்டு
கையில் அரிவாளுடன் கோயிலுக்குள் புகுந்து உண்டியல் & பித்தளைப் பொருட்கள் திருட்டு
