விருதுநகர் ஆர்.ஆர். நகர் பகுதியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா பெருவிழா, விமரிசையான கொடியேற்றத்துடன் மதநல்லிணக்கச் சூழலில் கோலாகலமாகத் தொடங்கியது.
பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோணிசாமி ஆண்டகை தலைமையில் சிறப்பு மாலைத் திருப்பலி மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
இக்கொடியேற்ற விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய ஜமாத்தினர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மதநல்லிணக்கத்தைச் சிறப்பித்தனர். ஆர்.ஆர். நகர் பங்கு மறைவட்டச் சபை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சவூரியார் ஆரோக்கியச் சபை சார்பாகத் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு சப்பரப் பவனி ஆசீர்வதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் மாலை வேளையில் நற்கருணை ஆசீர், சிறப்புத் திருப்பலிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழாவின் நிறைவு நாளான செப்டம்பர் 8-ஆம் தேதி அன்னை மரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை உயர் மறைமாவட்டக் குருகுல முதல்வர் தேவநேசன் தலைமையில் பொன்விழா கூட்டுப்பாடற் திருப்பலியும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் சொரூபத் தேர்பவனியும் நடைபெற உள்ளது.
- Virudhunagar
தூய ஆரோக்கிய அன்னை ஆலய கொடியேற்றம்
ஆர்.ஆர். நகர் தூய ஆரோக்கிய அன்னை ஆலய கொடியேற்றம்
