திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே FQL மற்றும் VG ஆன்லைன் செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் ஆசைவார்த்தையை நம்பி ரூ. 15 லட்சம் வரை இழந்து ஏமாற்றமடைந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கும்பகோணத்தின் மகன் ராசு (25), FQL மற்றும் VG ஆன்லைன் செயலிகள் மூலம் தனது குடும்பத்தினர் பெயரில் ரூ. 15 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்துள்ளார். அந்தப் பணம் முழுவதும் மோசடியில் சிக்கித் திரும்பக் கிடைக்காததால் மனவேதனை அடைந்த அவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராசுவின் (மாயழகன்) உடலைக் கைப்பற்றிய உறவினர்கள், மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உடலுடன் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வத்திப்பட்டி பிரிவு அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த நத்தம் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- Dindigul
FQL, VG ஆன்லைன் செயலி மோசடி விவசாயி தற்கொலை
FQL, VG ஆன்லைன் செயலி மோசடியில் விவசாயி தற்கொலை -சாலை மறியல்
