தென்மாநிலங்களின் பாரம்பரியமான தாய்மாமன் சீர் வரிசையை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் பேசும் பொருளாக மாற்றியுள்ளது மதுரையில் நடைபெற்ற ஒரு காதணி விழா. 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துத் தலையில் சுமந்து சென்றதுடன், கோடிக்கணக்கில் சீர்வரிசைகளை வழங்கி ஊரையே வியப்படையச் செய்துள்ளனர் உறவினர்கள்.
மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற சிறுமி ஒருவரின் காதணி விழாவில், சிறுமியின் தாய்மாமனும் தாத்தாவும் இணைந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கண்ணாடிப் பெட்டிகளில் அடுக்கி, தலையில் சுமந்து வந்து மொத்தம் 60 லட்சம் ரூபாயை மொய்யாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
வெறும் பணமுடிப்புடன் நின்றுவிடாமல், 50 பவுன் தங்க நகைகள், மினுமினுக்கும் வைர நெக்லஸ், சொகுசு கார், லாரி நிறைய 500 வகையான சீர்தட்டுக்கள், 50 கரும்புக்கட்டுகள், 500 மூட்டை அரிசி மற்றும் வெள்ளிப் பொருட்கள் என ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கப்பட்டுள்ளது.
நகைக்கடை விளம்பரம் போல குடும்பத்தினர் நகைகளை அணிந்து வந்து கலந்துகொண்ட இந்த காதணி விழாவின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாகத் டிரெண்டாகி வருவதுடன், "தாய்மாமன் சீர்னா இப்படித்தான் இருக்கணும்" என நெட்டிசன்களின் பலத்த பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
- Madurai
மிரட்டலான தாய்மாமன் சீர்
மிரட்டலான தாய்மாமன் சீர் – பெட்டி பெட்டியாக ரூ.60 லட்சம் மொய்
