Saturday, 5 September 2026

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • FQL நிதி நிறுவனம் – உயிரிழந்த இளைஞரின் உடலில் காயங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு
- Dindigul

FQL நிதி நிறுவனம் – உயிரிழந்த இளைஞரின் உடலில் காயங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு

FQL நிதி நிறுவனம் – உயிரிழந்த இளைஞரின் உடலில் காயங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல்லில் FQL ஆன்லைன் நிதி நிறுவன மோசடியில் சிக்கித் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ராசுவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது உடலின் பல்வேறு இடங்களில் ரத்தக் காயங்கள் இருப்பதாகவும் தாயார் மஞ்சு பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நிலையில், அதன் இணையதளம் முடங்கியது. முகவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அத்திறன் நிறுவனத்தில் பணம் வசூலித்துக் கொடுத்த நத்தத்தைச் சேர்ந்த விவசாயி ராசு மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ராசுவை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகக் கூறி உறவினர்கள் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், போலீஸ் வாகனங்கள் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புடன் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு வந்த ராசுவின் தாயார் மஞ்சு செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது மகன் யாரிடமெல்லாம் பணம் வசூல் செய்து கொடுத்தார் என்பதன் பட்டியலை எஸ்.பி.யிடம் ஒப்படைக்கவிருந்த நிலையில், சில செல்போன் நபர்கள் அவரை அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னரே அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், ராசுவின் காது, இடுப்பு மற்றும் மர்மப் பகுதிகளில் கடுமையான காயங்கள் இருப்பதாகவும், இது தற்கொலை அல்ல கொலை எனவும் கூறி உரிய நீதி விசாரணை கோரியுள்ளார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.