விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவில், பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் சதீஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களிடையே எழுச்சியுரை ஆற்றினார்.
விழாவில் பேசிய நடிகர் சதீஷ், கல்லூரி காலம் என்பது ஜாதி, மதம் கடந்த உண்மையான நண்பர்களைப் பெற்றுத் தரும் பொன்னான காலம் என்றும், இறுதிவரை கை கொடுக்கக்கூடியது கல்வி மட்டுமே என்பதால் மாணவர்கள் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், பெருந்தலைவர் காமராஜரின் நேர்மையைக் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், பெற்றோர்தான் குழந்தைகளுக்கு முதல் முன்மாதிரி என்றும் தனது வாழ்க்கை அனுபவங்களை நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார்.
கல்வியில் சிறந்து விளங்கி முதல் ஏழு இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
கல்லூரியின் செயலாளர் மகேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்திய இக்கூட்டத்திற்கு, முதல்வர் முனைவர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் முரளிதரன், பொருளாளர் தியாகராஜன், நிர்வாகி ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
- Virudhunagar
காமராஜ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா
விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா
