திண்டுக்கல் நாகல் நகர் குயவர் தெரு பகுதியில் கடந்த 10 நாளாகக் குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், பழுதான ஆழ்துளை கிணற்றைச் சீரமைக்கக் கோரியும் பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சியின் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீர் வற்றியுள்ளதாலும், காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வராததாலும் நாகல் நகர் குயவர் தெரு மக்களுக்கு கடந்த 10 நாட்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பல மாதங்களாகப் பழுதாகிப் பயனற்ற நிலையில் உள்ளதால், மாற்று வழியின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மாநகராட்சி நிர்வாகத்தை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- Dindigul
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
