விருதுநகர் காமாட்சி அம்மன் மாளிகையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாகத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய இம்மாநாட்டில், தீர்மானங்கள் முன்மொழிதல், கருத்தரங்கம், மகளிர் மாநாடு, பேரணி மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் புதியதாக 127 ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்குவது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களை ஊராட்சிகளாகப் பிரிப்பது, புதிய மாவட்டங்களை அமைப்பது உள்ளிட்ட 150 முக்கிய தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு அரசிற்கு அனுப்பப்படவுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ், தேர்தல் நேரத்தில் அரசு அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், கிராம ஊராட்சிச் செயலாளர்களை நிர்வாக அதிகாரிகளாக நிலைநடுத்த வேண்டும் எனவும், MGNREGS திட்டத்தில் வேலைநாட்களை உயர்த்தி முறையான ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் மாநில தலைவர் ரமேஷ் கோரிக்கை விடுத்தார்
- Virudhunagar
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு
விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு தொடக்கம்
