விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி உடற்கல்வித்துறை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான யோகா போட்டியில், போட்டியை நடத்திய வேவ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 8 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது யோகா திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உடற்கல்வித் துறையின் உதவிப் பேராசிரியரும் தலைவருமான முனைவர் ரமேஷ் மற்றும் கல்லூரி செயலாளர் ஸ்ரீமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுக் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கிச் சிறப்பித்தனர்.
கல்லூரியின் கூட்டுச் செயலாளர் சுவாதி புகழ் மற்றும் உபதலைவர் மணிபிரியா ஆகியோர் உடனிருந்து போட்டியைச் சிறப்பித்ததுடன், வெற்றி பெற்ற மாணவிகளை நேரில் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
- Virudhunagar
VVV பெண்கள் கல்லூரி யோகா போட்டி
விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி யோகா போட்டி – மாணவிகள் சாதனைப் படைத்து வெற்றி
