மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த மூதாட்டி முத்துப்பிள்ளை, தான் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக வாரிசு சான்றிதழ் வழங்கிச் சொத்துக்களை அபகரிக்க முயன்றதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலில் விழுந்து கதறி அழுதார்.
வங்கியில் நகை மீட்கச் சென்றபோது இச்சதி வெளிச்சத்திற்கு வந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் மருமகள் சுந்தரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
உயிருக்கு ஆபத்து உள்ளதாக உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், முறைகேடான முறையில் வாரிசு சான்றிதழ் வழங்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Madurai
உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு சாவு சான்றிதழ்
உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு சாவு சான்றிதழ்
